Tamilnadu Budget 2021 Updates In Tamil

தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் PTR  Palanivel Thiagarajan இன்று (ஆகஸ்ட் 13) சென்னை கலைவாணர் அரங்கில் Tamilnadu Budget 2021 ஐ தாக்கல் செய்தார். இது தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சமர்பிக்கப்பட்ட முதல் Budget ஆகும். 

Tamilnadu budget 2021
Palanivel Thiagarajan

Table Of Content

Tamilnadu Budget Highlights :

அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஊதியம் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படும். 

 செம்மொழி கலைஞர் சிறப்பு தமிழ் விருது வழங்கப்படும்.

 பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். 

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.

 திருப்பூர், விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் டைட்டில் பார்க் அமைக்கப்படும். 

100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் 300 ஆக உயர்வு. 

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும். 


Funds For The Department :

துறை ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)
பள்ளி கல்வித்துறை ₹ 32599.54
மின்சார துறை ₹ 19872.77
மருத்துவம், குடும்ப நலத்துறை ₹ 18933.20
நெடுஞ்சாலை துறை ₹ 17899.17
காவல்துறை ₹ 8930.29
நீர்பாசன திட்டம் ₹ 6607.17
உயர்கல்வி துறை ₹ 5369.09
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை ₹ 4142.33
குடிசைமாற்று வாரியம் ₹ 3954.44
ஜல்ஜீவன் இயக்கம் ₹ 2000.00
எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டம் ₹ 1725.41
நீதித்துறை ₹ 1713.30
மீன்வள துறை ₹ 1149.79
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் ₹ 1000.00
TamilNadu 2021 Budget Live Updates :
 

  • குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரேசன் கார்டில் குடும்ப தலைவரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை
  • ஒரு லட்சத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என Tamilnadu Budget ல் கூறப்பட்டுள்ளது. 
  • ஜல் ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும் என Palanivel Thiagarajan தனது Tamilnadu Budget ல் கூறினார். 
  • கிராமப்புரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு முன்பு இருந்ததில் இருந்து 3 மாதங்கள் அதிகரித்து 12 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது . 
  • கிராமங்களில் வீடுகளற்ற 8,03,924 பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும். வீடுகளுக்கான அரசு மானியம் ரூ. 2.76 லடசமாக உயர்த்தப்படும் என Palanivel Thiagarajan  தனது  Budget ல் கூறினார்.  
  • 100 நாள் வேலைத்திட்டம் இனிமேல் 50 நாள்கள் உயர்த்தப்பட்டு 150 நாள்களாக உயர்வு. மேலும் ஊதியம் 300 ஆகவும் உயர்வு. 
  • காடுகளின் அடர்த்தியை 33 விழுக்காடு உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்படும்.
  • தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
  • ஈர நிலங்களை மேம்படுத்த  தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்கள் கண்டறியப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும் என Palanivel Thiagarajan கூறினார். 
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 3 கோடி மீண்டும் அளிக்கப்படும். 
  • கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற 2757 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.   
  • உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் பத்து கடற்கரைகள் மேம்படுத்தப்படும். 
  • தமிழக அரசின்பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 17899 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் திருப்பூர், விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என Tamilnadu Budget ல் உள்ளது. 
  • திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, தேனி போன்ற இடங்களில் புதியதாக சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். 
  • தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் இறங்கு தளங்கள் அமைக்க ரூ. 433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • கிராமங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • தமிழகம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ. 6.607 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று Tamilnadu Budget ல் கூறப்பட்டுள்ளது.  
  • கல்லணை கால்வாயை புதுப்பிக்க மற்றும் விரிவுப்படுத்த ஆசிய உட்கட்டமைப்பு வங்கியில் ரூ. 2639 கோடி பெறப்பட்டுள்ளது. 
  • தமிழக மீனவர்கள் நலனுக்கு ரூ. 1149 கோடி செலவிடப்படும். 
  • கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.
  • அடுத்த பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும். 
  • காவல்துறையில் உள்ள 14317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று Tamilnadu Budget ல் கூறப்பட்டுள்ளது. 
  • தீயணைப்பு துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 405 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • சமூக பாதுகாப்பு ஓய்வு ஊதியத்திற்கு ரூ. 4807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ் மொழியை அனைத்து துறைகளிலும் ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • காவல்துறைக்கு ரூ. 8930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மேலும் தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும். 
  • தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • செம்மொழி கலைஞர் சிறப்பு தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என Tamilnadu Budget ல் கூறப்பட்டுள்ளது. 
  • அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • 1921 ஆம் ஆண்டு முதலான அனைத்து சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.
  • செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும் என Tamilnadu Budget ல் கூறப்பட்டுள்ளது . 
போன்றவற்றை தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் PTR  Palanivel Thiagarajan பட்ஜெட்டில் குறிப்பிட்டார். மேலும் இவர் Tamilnadu Budget ஐ மூன்று மணி நேரம் தொடர்ந்தார்.  


புதியது பழையவை