இந்திய தலைவர் வழங்காத செயல்திறனை வழங்கிய தமிழ்நாட்டின் தலைவர் என ஸ்டாலினை புகழ்ந்த ஆங்கில இதழ் !!!

           177 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட   இதழ் அரசியல், வணிகம், தொழில்நுட்பம் என பல்வேறு தளங்களில் கட்டுரை வெளியிடும் இதழாகும். மேலும் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளில் இந்த இதழுக்கு ஆசியர்கள் உள்ளனர். "தி எக்கனாமிஸ்ட் இதழ்" தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க ஸ்டாலின் குறித்து, மீட் த திராவிடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் இந்திய தலைவர் வழங்காத செயல்திறனை  வழங்கிய தமிழ்நாட்டின் தலைவர் என்னும் சிறப்புத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அந்த கட்டுரையில் உள்ளதாவது, 

முத்தமிழறிஞரின் புதழ்வன் மு.க ஸ்டாலின் :

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தந்தையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான  முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அரசியலில் ஜாம்பாவனாக விளங்கியவர்.மேலும்  தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை ஆட்சி அமைத்துள்ளார். சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மரணம், மு.க ஸ்டாலின் பிறந்த அதே வாரத்தில் தான் ஏற்பட்டது. சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார் கருணாநிதி. அது தான்  ஸ்டாலினுக்கு பெருமையாக இருக்கிறது.

ஐந்து உறுப்பினர் கொண்ட பொருளாதார குழு  :



 

        புதிதாக நியமிக்கப்பட்ட பொருளாதார கவுன்சிலுடன் தொடங்கலாம். எஸ்தர் டுஃப்லோ, இந்தியாவின் முன்னால் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ரிசர்வ் வங்கியின் முன்னால் தலைவர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் ஜியான் டிரேஸே ,மத்திய அரசின் முன்னால் நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோர், இந்த பொருளாதார குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

            எஸ்தர் டுஃப்லோ வளர்ச்சி திட்டங்களை மதிப்பிடுவதற்காக நோபல் பரிசு பெற்றவராவார், அரவிந்த் சுப்பிரமணியன்  பாஜாக  அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்து ராஜினாமா செய்தவராவார், ரகுராம் ராஜன் பாஜாக  அரசின் கருத்துக்கு மாற்று கருத்து உடையவர், ஜியான் டிரேஸே பாஜாக வின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர். இந்த ஐந்து உறுப்பினர் கொண்ட பொருளாதார குழுவை அமைத்ததன் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொதுநலன் சார்ந்த கருத்துகளுக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கருத்துகளுக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாக எடுத்துரைக்கிறது. 

ஸ்டாலின் என்னும் அரசியல்வாதி : 



1975 - 1977 ல் அவசரகாலத்தின் போது அப்போதைய இந்திய பிரதமர் ஜனநாயகத்தை இடைநிறுத்தி ஸ்டாலின் உட்பட அவரது அரசியல் எதிரிகளில் பெரும்பாலானோரை சிறையில் அடைத்தார்.சிறையில் ஸ்டாலின் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது தோழரில் சிலர் மரணமடைந்தனர். சிறைவாசத்திற்கு பின்னர் அவர் தீவரமாக தனது அரசியல் எதிர்காலத்திற்கு முதலீடுகளை தொடங்கினார். 1990 ல் இந்திய பொருளாதார திட்டத்தின் போது அவர் சென்னையில் வணீக சமூகத்திற்குள் தனது நண்பர்களை உருவாக்கினார். இறுதியில் கருணாநிதி அவரை மாநிலத்தின் தலைநகருக்கு மேயராக்கினார். சாயமேற்றிய கருப்பு பாம்படோரும், வெள்ளை அரை சட்டையும், பாரம்பரிய வேட்டியுடனும், தந்தைக்கு கீழ்படிந்தும் தன்னை அடையாளப்படுத்தினார்.

            பாஜாக அரசுக்கு எதிரான வலுவான தலைவராக கேரளா, மேற்கு வங்காள முதலமைச்சர்களான பினராயி விஜயன் மற்றும் மம்தா பேனரஜி உள்ளனர். இந்த வரிசையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் தன்னை வலுவாக நிலைப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடமிருந்து உத்வேகமில்லாத நிலையில் 2024 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  பாஜாக அரசுக்கு எதிராக மாநில கட்சிகள் கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உருவானால் ஸ்டாலின் அதில் மிக முக்கிய பங்கு வகிப்பார். அவர் தன் தந்தை கருணாநிதி போல்  திறமையான நிர்வாகியாக தன்னை முன் நிறுத்துகிறார். 

திமுக VS  அதிமுக  :

திராவிட முன்னேற்ற கழகத்தின் போட்டி கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும். 2016 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தூணான, தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சரான  ஜெ.ஜெயல்லிதா மரணமடைந்தார். இதன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வலுவிழந்தது. அதிமுக பாஜாக உடன் கூட்டணி வைத்தது, அது அவர்களை மேலும் வலுவிலக்க வைத்தது. காரணம் 2019 ம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  பாஜாக அரசுக்கு வடஇந்தியாவில் 60 சதவிகிதம் ஆதரவு இருந்தது, ஆனால் தென்இந்தியாவில் 2.2 சதவிகிதமே ஆதரவு இருந்தது. இதுவே அதிமுக வின் தோல்விக்கு காரணம். 2021 ல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தது. 

ஸ்டாலினுக்கு தி எக்கனாமிஸ்ட் இதழின் புகழாரம்  :

            மற்றவர்களை கவர்ந்திளுக்கும் தலைவர், சொற்பொழிவாளர், கருத்தியலாளர் எனும் வகையில் தனது எல்லைகளை நன்கு உணர்ந்தவராக ஒரு சிறந்த ஆட்சியாளர் என வரலாற்றில் இடம்பெற விரும்புகிறவராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திகழ்கிறார் என வரலாற்றாசிரியர் ஏ.ஆர் வெங்கடாசலபதி கூறுகிறார். மேலும் அவர் தோற்கடிக்கப்பட்ட அரசாங்கத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை கொரோனா தடுப்பதற்கான ஆலோசனைக் குழுவில் இடமளித்துள்ளார். கொரோனா என்னும் இந்தப் பெருந்தொற்று , நாட்டின் பிறபகுதிகளோடு ஒப்பிடும் வகையில் மிகவலிமையான மக்கள் நல்வாழ்வு, உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளமைக்காக தமிழ்நாட்டு மக்களை நன்றி செலுத்தக்கூடியவர்களாக ஆக்கியுள்ளார் ஸ்டாலின் என  தி எக்கனாமிஸ்ட் இதழ் ஸ்டாலினுக்கு  புகழாரம் சூட்டியுள்ளது.            

புதியது பழையவை