ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷான் அதிரடியால் இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Ind Vs SL 2021 odi
Shikhar Dhawan 


 இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கிஷான் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். ஷிகர் தவான் 86 ரன்களும், ப்ரித்வி ஷா 43 ரன்களும் எடுத்தனர். 


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி இன்று ஜீலை 18 கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  


SL Choose To Bat  : 

இலங்கை அணியில் அவிஷ்கா பெர்ணான்டோ மற்றும் விக்கெட் கீப்பர்  மினோட் பனூகாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  32 ரன்கள் எடுத்திருந்த   அவிஷ்கா பெர்ணான்டோ யுஸ்வேந்திர சஹல் வீசிய ஒன்பதாவது  ஓவரில் மணிஷ் பாண்டேவிடம்  கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த மினோட் பனூகா, பனூகா ராஜபக்ஷா, தனஞ்சயா டி சில்வா உள்ளிட்டோர் நிலைத்து ஆடாமல் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 


Middle Order Partnership :

பின்னர் வந்த சரித் அசலன்கா சற்று நிலைத்து நின்று  38 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹல் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் தஷுன் சனாகா 39 ரன்களும், வனின்டு ஹசரங்கா 8 ரன்களும் எடுத்தனர்.


Finisher Chamika Karunaratne :


 பின்னர் வந்த      இலங்கை அணி வீரர்  ஷமிகா கருணரத்னே அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய  இவர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இவர் இரண்டு சிக்சர் மற்றும் ஒரு போர் அடித்தார். புவனேஷ்குமார் வீசிய கடைசி ஓவரில் கருணரத்னே 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் வந்த பவுளர்கள் சோபிக்க தவறியதால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 262  ரன்கள் குவித்தது.

Indian Bowlers :

இந்திய அணியில்  குல்தீப் யாதவ்,  யுஸ்வேந்திர சஹல், தீபக் சஹர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.  புவனேஷ்வர் குமார் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. 

 இந்திய அணி வெற்றி பெற 50 ஓவர்களுக்கு 263 ரன்கள் எடுக்க வேண்டும். 

  

Indian Team Batting :


இந்திய அணி வெற்றி பெற 50 ஓவர்களுக்கு 263 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா  9 போர்களுடன் 24 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  43 ரன்கள் எடுத்திருந்த   ப்ரித்வி ஷா தனஞ்சயா டி சில்வா வீசிய ஐந்தாவது  ஓவரில் அவிஷ்கா பெர்ணான்டோ  கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.


Two Half Centuries :



பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் இலங்கை அணியினர் வீசிய பந்துக்களை பவுண்டரிகளாக விளனார். இஷான் கிஷான் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 8 போர்கள் மற்றும் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாண்டகன் வீசிய பதினேழாவது  ஓவரில் மினோட் பனூகாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இஷான் கிஷான்க்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. நிதானமாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இறுதிவரை களத்திலிருந்த ஷிகர் தவான் 86 ரன்களும் சூர்ய குமார்  யாதவ் 31 ரன்களும் எடுத்தனர். 


Ind Won The Match :

இந்திய அணி 36.4 ஓவரில் 263 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. 


மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

 

அடுத்த ஒரு நாள் போட்டி ஜீலை ஆம் தேதி நடைபெறும். 


ஆட்டநாயகன் விருதை ப்ரித்வி ஷா பெற்றார். 

புதியது பழையவை