பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளானில் உருவான மத்திய அமைச்சரவை, முழு விபரம் உள்ளே..

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் :

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறை ஆட்சி அமைத்த நரேந்திர மோடி இரண்டு ஆண்டுகளாக தனது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். புதன்கிழமை குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 43  அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் பதவிபிரமாணமும்,  இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியின் அமைச்சரவையில் முதலில் 53 அமைச்சர்கள் இருந்தார்கள். அதில் 12 அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். புதியதாக 36 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக வில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் உள்ள சிறப்பு :


அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து 8 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் 6 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சரவையில் ஐம்பது வயதுக்கு மேல் 29 பேரும், ஐம்பது வயதுக்கு கீழ் 14 பேரும் உள்ளனர். மேலும் 13 வழக்கறிஞரும், 6 மருத்துவர்களும், 5 பொறியாளர்களும், 7 இந்திய குடிமை பணியிலிருந்தவர்களும்,  7 முனைவர் பட்டம் பெற்றவர்களும்,  3 வணிகர்களும், 7 பெண்களும், 4 மாநில முதலமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 81 பேர் அமைச்சர்களாக இடம் பெறலாம் என்ற நிலையில், தற்போது அமைச்சரவையில் 77 அமைச்சர்கள் உள்ளனர். 

இராஜினாமா செய்த அமைச்சர்கள் :


மத்திய சுகாதாரம் மற்றும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்,

மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார்,

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க்,

மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா,

மத்திய மனிதவள மேம்பாட்டுக்கான அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே,

மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டெபிரி சவுத்ரி,

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்,

மத்திய கால்நடை பராமரிப்பு பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பிரதாப் சாரங்கி,

மத்திய சட்டம் & நீதித்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா,  

மத்திய மாநில அமைச்சர் பாபுல் சுப்ரியோ,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சர் அஸ்வினி குமார் சௌத்ரி,
 ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தனர். 

மத்திய பெண் அமைச்சர்கள் :


மத்திய அமைச்சரவையில் இம்முறை 11 பெண்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. முதலில் மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி இணை அமைச்சர்களாகவும், சாத்தி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சாரதா   என நான்கு அமைச்சர்கள் இருந்தனர். 

இந்நிலையில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில்  மீனாட்சி லேகா,  ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், அன்னப்பூர்ணா தேவி, பிரதிபா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் , தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் என ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றார்.

புதிய  ஏழு பெண் அமைச்சர்களின் விபரம் :


ஷோபா கரன்ட்லஜே 54 , கர்நாடகம் :
 

இவர் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி சிக்மலூர் தகுதி மக்களவை உறுப்பினர் ஆவார். கர்நாடக அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் ஆக இருந்திருக்கறார். அந்த மாநிலத்தில் ஒரு முறை எம்எல்ஏ, எம்எல்சி பதவியை வகித்திருக்கிறார்.  மாநில உணவு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். புதிய அமைச்சரவையில் வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.

மீனாட்சி லேகி 54, புதுடெல்லி :


இவர் புதுடெல்லி மக்களவை தகுதியில் இருந்து இரண்டாவது முறை தேர்வாகியுள்ளார். இவர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார், உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், சமூக சேவகராகவும் அறியப்பட்டவர். புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை  இணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

 தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் 60, குஜராத் :


இவருக்கு ஜவுளித்துறை மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார்

அன்னப்பூர்ணா தேவி 51, ஜார்க்கண்ட் :


 இவர் ஜார்க்கண்ட் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சராக பதவி வகித்தவர். ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் நான்கு முறை எம்எல்ஏ வாக தேர்வாகியுள்ளார். இவர் பீகார் அரசின் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவர். முதல்முறையாக லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ளார். இவர் தற்போது கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.

டாக்டர் பாரதி பிரவீன் பவார் 42 , மஹாராஷ்டிரா :


மருத்துவரான இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தார். நாசிக் மாவட்டத்தில் உள்ள எஸ்.டி தனித்தொகுதியான டின்டோரியில் போட்டியிட்டு வென்றவர். புதிய அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலன்  இணை அமைச்சராக இருக்கிறார். 

பிரதிமா பவுமிக், 52 திரிபுரா :


இவர் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள முதல் நபர் என்ற பெருமை இவரையே சாரும். புதிய அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.

அனுப்பிரியா சிங் படேல் 40, உத்தரபிரதேசம் :


இவர் உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்ஸாபூர் தொகுதியைச் சார்ந்த மக்களவை உறுப்பினராவார். உத்தரபிரதேச மாநில சட்டசபையில் எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். இவர் இரண்டாவது முறை எம்.பி ஆக பதவி வகித்துள்ளார். புதிய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை இணை அமைச்சராக இருக்கிறார். 

புதிய மத்திய அமைச்சர்கள் :

 

1. ராம்சந்திர பிரசாத் சிங் 63, பீகார் 

2. ஜோதி ராதித்யா எம் சிந்தியா 50, மத்தியப்பிரதேசம் 

 3. வீரேந்திர குமார் 67,  மத்தியப்பிரதேசம் 

4. சர்பானந்தா சோனோவால் 58, அசாம் 

5. நாராயண் டட்டு ரான 69, மஹாராஷ்டிரா 

6. பங்கஜ் சவுத்ரி 56, உத்தரப்பிரதேசம் 

7. பூபேந்தர் யாதவ் 52, ராஜஸ்தான் 

8. பசுபதி குமார் பராஸ் 68, பீகார்

9. அஸ்வினி வைஷ்ணவி 50, ஒடிசா 

10. சத்ய பால் சிங் பாகேல் 61, உத்தரபிரதேசம்

11. ராஜீவ் சந்திர சேகர் 57, கர்நாடகா

12. பானு பிரதாப் சிங் வர்மா 63, உத்தரபிரதேசம்

13. நாராயணசாமி 64, கர்நாடக 

14. கௌவ்சல் கிஷோர் 61, உத்தரப்பிரதேசம் 

15. அஜய் பட் 60, உத்தரகண்ட் 

16. பி. எல். வர்மா 59, உத்தரபிரதேசம்

17. அஜய் குமார் 60, உத்தரபிரதேசம்

18. சவுகான் தேவுசிங் 56, குஜராத்

19. மகிந்தா குபா 54, கர்நாடக 

20. கபில் மோரேஸ்வர் 60, மஹாராஷ்டிரா 

21. சுபாஸ் சர்க்கார் 67, மேற்கு வங்காளம்

22. பகவத் கிஷன்ராவ் காரத் 64, மஹாரஷ்டிரா 

23. ராஜ்குமார் ரஞ்சன் சிங் 68, மணிப்பூர் 

24. பிஷ்வேஸ்வர் ட்டு 56, ஒடிசா

25. சாந்தனு தாகூர் 38, மேற்கு வங்காளம்

26. முஞ்சாபரா மகேந்திரபாய் 52, குஜராத்

27. ஜான் பார்லா 45, மேற்கு வங்காளம்

28. எல். முருகன் 44, தமிழ்நாடு 

29. நிதித் பிரமானிக் 35, மேற்கு வங்காளம்
புதியது பழையவை