ஆறு வருடங்களுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

 

Windows 11 update
Windows 11



மைக்ரோசாப்ட் நிறுவனர்கள் பில்கேட்ஸ் மற்றும் பால் பின்னி ஆவார்கள்.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0ஐ நவம்பர் 20 1985 ல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தனது முதல் பதிப்பாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து சம கால இடைவெளியில் தனது பதிப்பை வெளியிட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியாக  விண்டோஸ் 10 ஐ ஜுலை 25 2015 ல்  வெளியிட்டது. விண்டோஸ் 10  பதிப்பு வந்து ஆறு வருடம் கழித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  ஜுன் 6 2021 ல்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு அதிகாரி பனோஸ் பனாய் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டார்.

Windows 11 Features :


விண்டோஸ் 10 ல் டாஸ்க்பார் இடது புறமாக உள்ளது. தற்போது  விண்டோஸ் 11 ல்  டாஸ்க்பார் மையத்தில்  மாற்றியமைத்து உள்ளது, இருப்பினும்  பயனாளரின் தேவைக்கேற்ப டாஸ்க்பாரினை  இடது புறமாகவோ அல்லது மையத்திற்க்கோ  மாற்றியமைத்து கொள்ளலாம். டாஸ்க்பாரில் புதியதாக சேட் (Chat) மற்றும்  டீம் (Team) செயலியும் இடம் பெற்றிருக்கும்.

install windows 11 PC
Windows 11- Team 

டீம்  செயலியில் பயனாளர்கள் தனது கான்டாக்டில் உள்ள அனைவருடனும் உரை எழுதுதல் ,சேட் செய்தல், குரல் செய்தி அனுப்புதல் , காணொலி அழைப்பு  மேற்க்கொள்ளுதல்  போன்றவற்றை  செய்யலாம். மேலும் பயனாளர் பேச விரும்புபவர்   டீம்  செயலியை பதிவிறக்கம் செய்யாத போதும் டு வே எஸ்எம்எஸ் மூலம் இருவரும் உரையாடலாம்.

மேலும் கேட்ஜெட்டில் வானிலை, பங்குச்சந்தை செய்தி, விளையாட்டுச் செய்தி ஆகியவற்றை காணலாம்.  டேப்லெட்டில் ஐகான்களுக்கு இடையே இடைவெளியை அதிகப்படுத்தியும் நமது குரலை பகுப்பாய்வு செய்து செயல்புரியும் தன்மைக்கு மேம்படுத்தி உள்ளார்கள்.

install windows 11 PC
Windows 11- Menu


விண்டோஸ் 11 ல் உள்ள டாஸ்க் பார் இடம் மாறியுள்ளது. இதில் ஐகான்கள் கணிணியின் மையப் பகுதியில் காணப்படும். இது மட்டுமில்லாமல் அதன் ஸ்டார்ட் மெனுவும் நிறைய மாறிவிட்டது. 

இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு திரையில் பல விண்டோக்களில் வேலை செய்ய முடியும். இது ஸ்னாப் லேஅவுட் (Snap Layout) என்று அழைக்கப்படுகிறது.  மல்டி டாஸ்க் பணியில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

உங்களது லேப்டாப் அல்லது கணினி தொடுதிரை அதாவது Touch Screen  என்றால் நீங்கள் கீ போர்ட் இல்லாமலேயே வேலை செய்யலாம். இதில் உள்ள ஜெஸ்சர் மற்றும் ஸ்ட்ரைக் அம்சங்கள் பெரிதும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்த விண்டோவில் தட்டச்சு செய்வதற்கான குரல் தட்டச்சு (Voice Typing) அம்சமும் உள்ளது. இதனால் நீங்கள் மிக வேகமாக தட்டச்சு செய்ய முடியும். இது சிறந்த டச் கீபோர்டு கொண்டது.  இது பயனார்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். 

install windows 11 PC
Windows 11- Chat Box


டெல், எச்பி, லினோவா, சாம்சங் போன்ற கணிப்பொறிகளில் விண்டோஸ் 11 ஐ எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Microsoft Store :

புதிய மைக்ரோசாப்ட்  ஸ்டோர் நம்பிக்கையான தளமாகவும்  இந்தக்களம்   செயலியை பயன்படுத்த, விளையாட, படிக்க, வேலை செய்ய பயன்படுத்த எளிதாகவும்  உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் டீம்ஸ், விஸ்வல் ஸ்டுடியோ, டிஸ்னி+, அடோபி கிரியேடிவ், க்லௌடு, ஜீம், கானுவா போன்ற செயலிகளும் உள்ளன. கேம் விளையாடுபவர்க்கு சிறந்த பதிப்பாக உள்ளது. கண்ணை கவரும் வகையிலான  கிராபிக்ஸ்   விண்டோஸ் 10 ல் உள்ளது.

மேலும் விண்டோஸ் 11 ஸ்டோரில் அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் தொகுப்பை பெறுவீர்கள். இதில் நீங்கள் திரைப்படங்கள் அல்லது தொடர்களை வாங்கலாம். 

இந்த விண்டோஸ் 11 ல் ஆப்ரேடிங் சிஸ்டத்தில்   செயலியை  தரவிறக்கம் செய்யும் வசதி  உள்ளது. ஆண்ட்ராய்டு  செயலியை  தரவிறக்கம் செய்ய  அமேசான் ஆப் ஸ்டோர் Amazon App Store மூலம் தரவிறக்கம் செய்யலாம். அனைத்து  ஆண்ட்ராய்டு  செயலிகளையும் இதில் நிறுவலாம் இருப்பினும் இதற்கு சில வரம்புகள் உள்ளது. 

இந்த புதிய வெர்ஷன் இயங்குதளத்தில் கேமிங் பிரியர்களுக்கான ஆட்டோ HDR அம்சமும்  இடம்பெற்றுள்ளது.  கேம் விளையாடுபவர்க்கு சிறந்த பதிப்பாக உள்ளது. கண்ணை கவரும் வகையிலான  கிராபிக்ஸ்   விண்டோஸ் 11 ல் உள்ளது.

 Windows 7 :

மைக்ரோசாப்ட் (Microsoft)  விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு விண்டோஸ் 11 இலவசமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தும் பயனர்கள் புதிய OS இலவசமாக கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்  விண்டோஸ் 7 தான்  விண்டோஸ்களிலேயே அதிகம் பயன்படுத்துவதாகும். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு இலவச அப்டேட் சலுகையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 11 தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டின் இறுதியிலேயே சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விண்டோஸ் 11 உடன் கூடிய கணினிகள் விற்பனைக்கு வரும். டிபிஎம் சிப் இருந்தால் விண்டோஸ் 11 ஐ பயன்படுத்த எளிமையாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. 

தகுதியுடைய பயனாளர்கள்  விண்டோஸ் 10 ஐ விண்டோஸ் 11 ஆக மாற்ற முடியும். அவர்கள் Microsoft Store.com வழியாக PC Health Check செயலியை தரவிறக்கம் செய்து சோதித்த பின் தரவிறக்கம் செய்யலாம்.
புதியது பழையவை