அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக்கினார்.

ரஜினி தான் இனி அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனக் கூறி ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியலுக்கு வரப்போவதாக சென்னையில் உள்ள தனது ராகவேந்திர திருமண மண்டபத்தில் கூறிய ரஜினிகாந்த், டிசம்பர் 29, 2020 ல்  அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனக் கூறி தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ரஜினிகாந்த் முடிவை ஏற்காத ரசிகர்கள் சிலர் ரஜினிகாந்த்தின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர், சிலர் அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினார், சிலரோ வேறு கட்சிகளில் சேர்ந்தனர். 

சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகிய ரஜினிகாந்த் இன்று தனது எண்ணத்தை மாற்றத் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார் மற்றும் தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று கூறினார். 70 வயதான ரஜினிகாந்த் தனது மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்த பிறகு எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் திட்டம் எனக்கு இல்லை என்று கூறினார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின் தனது ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

இன்று காலை கூட்டத்திற்கு சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தனது மன்றத்தின் எதிர்காலம் மற்றும் அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல நீடித்த கேள்விகள் விவாதிக்கப்படும் மற்றும் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்ற கேள்வி உள்ளது . இவை அனைத்தையும் விவாதித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். 


செய்தியாளர் சந்திப்பு :


Rajinikanth politics


இன்று செய்தியாளர் சந்தித்த ரஜினிகாந்த் உடல் நிலை பிரச்சினை காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பியதாகவும், கொரோனா கால சூழல்கள் காரணமாக பொதுவெளியில் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்ததாகவும் . பின்னர் தனது ராகவேந்திர திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு தனது அரசியல் பிரவேசம் மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைபாடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அறிக்கை :


Rajinikanth politics
Rajinikanth politics


அறிக்கையில் உள்ளதாவது, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும்,  உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களாக ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சென்ற பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன?  என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. 

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். 

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல  ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்போடு தெரிவித்து கொள்கிறேன், என்று உள்ளது. 

ரசிகர்களின் எண்ணம் :

ரஜினிகாந்த் தனது அரசியல் வருகைக்கு எப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும் கூட விடாமல் அவரது ரசிகர்கள் அவரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். காலம் நிச்சயம் மாறும் நம் தலைவரின் மனமும் மாறும் எனக் கூறிவந்தனர். 

அதற்கேற்றாற்போல் திடீரென மக்கள் மன்ற நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்களை சந்திக்க அழைப்பு விடுவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இதையடுத்து போயஸ் தோட்டத்திலிருந்து ரஜினிகாந்த் கோடம்பாக்கம் கிளம்புவதற்கு முன்னர் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என தெரிவித்திருந்தார். இதனால் இன்று தலைவர் மாஸ் அறிவிப்பை அறிவிக்க போகிறார் என அவரது ரசிகர்கள் எண்ணி இருந்தனர்.  ஆனால் அவரோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என சொல்லிவிட்டார். 

மேலும் தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் கூறிவிட்டார். அரசியலுக்கு வரவில்லை எல்லாம் சரி. ஆனால் மக்கள் மன்றத்தை ஏன் கலைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் மன்றம் கலைப்பு என்ற ரஜினியின் முடிவு சரியானது. அரசியலே இல்லை என்கிற போது அதற்கான அமைப்பு மட்டும் ஏன் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்?  

ரஜினி மக்கள் மன்றத்தை அப்படியே விட்டுவிட்டால் அதை வைத்து யாரேனும் தவறாக பயன்படுத்த கூடும் என ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டார். 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாததால் அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக அவர் அந்த படப்பிடிப்பின் இறுதி காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்காமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் ஈடுபடுவார் என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தார். 

புதியது பழையவை