Afghanistan War Latest News In Tamil

20 ஆண்டுகளாக Afghanistan ல் இருந்த அமெரிக்க படைகளை திரும்ப பெருவதாக அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடன்  கூறியவுடன் இதற்காகவே காத்திருந்த Talibans நாட்டின் பாதி மாகாணங்களையும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கந்தகாரையும் கைப்பற்றி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது உலக நாட்டினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Afghanistan war latest news in tamil
Afghanistan war latest news

Table Of Content 

 

 Who Are Talibans :

Afghanistan war latest news in tamil
Taliban's Flag

Taliban  என்பவர் சன்னி இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள். இவ்வமைப்பு பாகிஸ்தானில் தோன்றியது. தற்போது Talibans பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானிலும், மேற்கு பாகிஸ்தானிலும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஐரோப்பா மற்றும் சீனாவிலும் உள்ளனர். இவர்கள் 2001 ஆண்டு வரை Afghanistan நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் தாலிபான் தலைவர்களை Afghanistan ஐ ஆளுவதனை தடுத்தது. தாலிபான்களுக்கு ஆயுதங்களும், இராணுவப் பயிற்சிகளையும் பாகிஸ்தான் அரசு செய்து வருகிறது. ஆனால் இதனை அவ்வரசு திட்டவட்டமாக மறுக்கிறது. இருப்பினும் கடந்த காலங்களில் Afghanistan ஆண்ட தாலிபான்களுக்கு ஆதரவு அளித்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. 

இவர்கள் பெண்கல்வி எதிர்ப்பாளர்களாவர். மேலும்  பெண்கள் தங்களது உடலை முழுவதும் பர்தா கொண்டு மூட வற்புருத்துவது, குற்றவாளிகளை பொது வெளியில் கொள்ளுதல், களவில் ஈடுபடுபவர்களின் கை, கால்களை வெட்டுவது மற்றும் ஆண்கள் தாடி வளர்க்க கூறுவது போன்றவற்றை Talibans தங்களது கொள்கையாக வைத்துள்ளனர்.

Twin Tower Destroyed   :


Afghanistan war latest news tamil
Twin Tower


ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனின் தலைமையில் இயங்கும் அல் கொய்தா என்னும் தீவிரவாத இயக்கத்திற்கு Talibans ஆதரவு கொடுத்து வந்தனர். அமெரிக்காவில் இதுவரை நிகழ்ந்திராத தாக்குதலை இவ்வியக்கம் 2001 ஆம் ஆண்டு நிகழ்த்தியது. 

Sep 11, 2001 அன்று தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அமெரிக்காவின் நான்கு  பயணிகள் விமானம் கடத்தப்பட்டன. அதில் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையமான Twin Tower என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரத்தின் மீது பாய்ந்தது. ஒரு விமானம் பென்சில்வேனியாவின் வயல்வெளியில் விழுந்தது. மற்றோரு விமானம் வாஷிங்டன்னில் உள்ள பெண்டகனை இடித்தது. இப்பெரும் தாக்குதலில் 3000 அப்பாவி மக்கள் உயிர் நீத்தனர். 

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க வலியுறுத்தினர். ஆனால் Talibans  அதனை மறுத்தனர். இதுவே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யாமல் போனதற்கான காரணமாகும்.  பின்னர் அமெரிக்க படைகள் அல் கொய்தா, தாலிபான்களின் கூடாரங்கள் மீது குண்டு வீசியது. காபூல், கந்தகார் நகரங்கள் தாக்கப்பட்டன. Talibans ஊரை விட்டு வெளியேறினர். 2001 நவம்பர் 13ம் தேதியில் முழுவதும்  Talibans  அடக்கப்பட்டனர். 

மே 2, 2011 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு  மேலும் சில படை வீரர்களை அனுப்பினார். இவர்கள் பொதுமக்களை பாதுகாப்பதோடு நாட்டிற்குள் ஊடுருவும் படைகளை அழித்தும் Talibans ஆக்கிரமிப்பை தடுத்து  வந்தனர். 


America Taliban Agreement :


Feb 19, 2020 ல் Taliban குழுக்கள் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. Doha வில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பிற்க்கும் உடன்படிக்கை எட்டப்பட்டது. 

Doha Agreement :


Doha உடன்படிக்கையில்  அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திருப்பிக் கொள்வதாகவும், Talibans அமெரிக்கா படைகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும்,  அல் கொய்தா மற்றும் வேறு சில தீவிரவாத அமைப்புகளை Taliban கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைகளில் அனுமதிக்க கூடாது எனவும், ஆப்கானிஸ்தான் அரசு தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

Doha உடன்படிக்கையின்படி அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நிலைநிறுத்தி உள்ள தனது படைகளை Sep 11 ம் தேதிக்குள் முழுவதுமாக  திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

அதன்படி அமெரிக்கரின் பாதி படைகளும், மற்ற வெளிநாட்டினரின் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில் Taliban படைகள் ஆப்கானிய பாதுகாப்பு படைகள் மற்றும் ஆப்கானிய மக்களை தாக்கி  ஆப்கானிஸ்தானில் அதிவேகமாக அவர்களின் ஆதிக்கத்தை  நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. 

July 31 :

Taliban - Rocket Attack On Kandahar Airport :  


சனிக்கிழமை இரவில் Kandahar விமான நிலையத்தின் மீது தாலிபான்கள் தொடர்ந்து மூன்று ராக்கெட்டுக்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படவில்லை. காபூலில் உள்ள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ராக்கெட் தாக்குதலை உறுதிப்படுத்தினார். காபூலுக்கு அடுத்ததாக Kandahar  ஆப்கானிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரம் ஆகும். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து தான் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு தேவையான போர்க்கருவிகள் அனுப்பப்படுகின்றன. இதனாலேயே  Kandahar விமான நிலையத்தை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் இராணுவத்தை பலவீனப்படுத்த இந்த தாக்குதல் தாலிபான்களால் நடத்தப்பட்டது என எண்ணப்படுகிறது.  

August 10

Rashid Khan Appeals To World Leaders :


 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரசித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகத் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, உலகத் தலைவர்களே, என் நாடு பெரும் குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் தனது இன்னுயிரை விடுகின்றனர். வீடுகளும், சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. எங்களை குழப்ப நிலையில் விட்டு விடாதீர்கள். 

ஆப்கானியர்களை கொள்வதை நிறுத்துங்கள். ஆப்கான் அழிவை தடுத்து நிறுத்துங்கள் எனக் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.


August 12

12 Nations Meeting About Afghanistan War :

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களை கைப்பற்றியுள்ள நிலையில் பன்னிரண்டு நாட்டின் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.  இந்தியா, அமெரிக்கா, கத்தார், ஐக்கிய நாடுகள் சபை, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி, பாகிஸ்தான், துருக்கி, நார்வே, சீனா, பிரிட்டன், தஜகஸ்தான் ஆகிய நாடுகளே தாலிபான்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை கூட்டத்தில்  ஈடுபட்ட நாடுகள் ஆகும். 

ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஆயுதப்போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் ஒரு அரசாங்கம் அமைந்தால் அதை அங்கீகரிக்க கூடாது எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் தீர்மானம் 2513 ஐ குறிப்பிட்டு மோதலுக்கு ராணுவம் தீர்வு இல்லை என்பதை நினைவு கூர்ந்தனர். அதனையே இந்த ஆலோசனை கூட்டத்திலும் தெளிவு படுத்தினர். 


இந்த நிலையில் அமெரிக்க தூதரகம் ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை அன்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் அமெரிக்க தூதரகர்கள் அனைவரும் கிடைக்கக்கூடிய விமானங்களைப் பயன்படுத்தி உடனடியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.


August 13

Taliban's Captured  Kandahar  :

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான Kandahar ஐ Taliban's வெள்ளிக்கிழமை அன்று கைப்பற்றினர். இதுவரை இவர்கள் ஆப்கானிஸ்தானின் 65% பகுதிகளை கைப்பற்றினாலும் Kandahar கைப்பற்றியதே Taliban's களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. ஏனென்றால் Taliban களின் பிறப்பிடமே Kandahar தான். மேலும் முன் காலத்தில் தாலிபான்கள் ஆட்சி செய்த போது Kandahar தான் அவர்களின் வலுமிக்க பகுதியாகும். இங்கு சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் முக்கிய பொருளாதார மண்டலமாகவும், விவசாய மற்றும் தொழில் துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாகவும் இருப்பதால் Kandahar தாலிபான்கள் கைப்பற்றியதில்  ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்


 UN Chief Antonio Guterres :

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் António Guterres ஆப்கானிஸ்தான் போர் கட்டுப்பாட்டை மீறி விட்டதாக ட்விட்டரில் கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் நிலைமை  கட்டுப்பாட்டை மீறி வருகிறது ஒவ்வொரு நாளும் நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொது மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களை பாதுகாப்பதற்கான எங்களது கடமையை நான் அனைத்து தரப்பினர்களுக்கும் நினைவு ஊட்டுகிறேன். தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு தாலிபான்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். மேலும்  ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் கலக்கம் அடைய செய்கின்றன. ஆப்கானிஸ்தானில் பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டு மனித உரிமை மீறல் நடைபெற்று வருகின்றன. ஆப்கானியர்களின் உயிர்களையும், உரிமைகளையும் காப்பாற்ற மனிதாபிமான ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளது எனக் கூறினார். 

Indian Ambassadors Bring From Afghanistan :

ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரகர்ளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு எடுத்து உள்ளது. அதன்படி  மத்திய அரசு ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரமான மசார் -இ-ஷெரிப் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து விரைவில் இந்திய அதிகாரிகளை தாயகம் அழைத்து  வர நடவடிக்கை. இதற்கு முன்னர் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள Kandahar இல் இருந்து இந்திய தனது தூதரகர்களை தாயகம் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னர் தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் முகமது சஹைல் ஷாஷின் இந்தியாவுற்கு எதிராக செயல்படும் எண்ணம் இல்லை என்றார். மேலும் இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானியர்களுக்கு கட்டப்பட்ட அணை உள்ளிட்ட பலீவேறு தேசிய உட்கட்டமைப்பு திட்டங்களை பாராட்டுவதாகும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு எதிராக செயலபடும எண்ணம் இல்லை என்று கூறினார். 

புதியது பழையவை