karnataka News Live: Basavaraj Bommai has been elected as the new Chief Minister of Karnataka In Tamil

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக Basavaraj Bommai தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் கர்நாடகா மாநிலத்தின் 23 ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

table 

karnataka new cm Basavaraj Bommai

 


Karnataka New CM Basavaraj Bommai :

Karnataka new CM basavaraj bommai
CM basavaraj bommai

பெங்களூரில் முதலமைச்சரை தேர்வு செய்வற்காக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக தற்போது சட்டத்துறை அமைச்சராக இருக்கும்  Basavaraj Bommai ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு 61 வயது ஆகிறது. புதிய முதலமைச்சராக Basavaraj Bommai நாளை பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள்  முதலமைச்சரான எடியூரப்பா தனது  ராஜினாமா  கடிதத்தை கர்நாடகாவின் ஆளுநர் தவார் சந்த் கெஹ்லோட்டிடம் கொடுத்தார். 

Basavaraj Bommai :

பசவராஜ் பொம்மை 1960 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பிறந்தார். இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹீப்ளி என்னும் இடத்தில் பிறந்தார். தற்போது இவர் கர்நாடக சட்டமன்ற தொகுதியான Shiggaon பகுதியில் வசித்து வருகிறார்.   பசவராஜ் பொம்மையின் தந்தை  கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ். ஆர். பொம்மை மற்றும் அவரின்  தாயார் கங்கம்மா ஆவார். அவருக்கும் சென்னம்மா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.  மேலும் பசவராஜ் பொம்மை KLE தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ளார். பின்னர் புனேயில் உள்ள டாட்டா மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் இதுவரை இரண்டு கட்சிகளில் இருந்துள்ளார். அவை  ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகும். 


Political Career :

இவர் முன்னதாக கர்நாடக உள்துறை, சட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சட்ட அமைச்சராக இருந்தார். உடுப்பி மற்றும் ஹவேரி அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். Basavaraj Bommai கர்நாடகா மாநிலத்தின் 23 ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்னாள் கர்நாடகாவின் முதலமைச்சரான எஸ். ஆர். பொம்மையின் புதல்வன் ஆவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக Dharwad தொகுதியில் இருந்து 1998, 2004 என இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அப்போது Basavaraj Bommai ஜனதா தளம் கட்சியில் இருந்தார். பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். Basavaraj Bommai 2008 கர்நாடக மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் Shiggaon தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். Basavaraj Bommai சதர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர். 

Yediyurappa Resigns Karnataka CM Post :

காங்கிரஸ் கட்சியின் எச் டி குமாரசாமி முதல்வராக பதவியேற்ற பின் ஜூலை 2019 ல் 17 எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்ததன் பெரும்பான்மையை இழந்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து நான்காவது முறையாக கர்நாடகத்தின் முதலமைச்சர் ஆக பதவியேற்றார்.  எடியூரப்பா பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடையவிருந்த சூழ்நிலையில்   கர்நாடக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்தியில் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், வதந்தியும் பரவியது. அவர் லிங்காயத் என்னும் சமூகத்தை சார்ந்தவர். லிங்காயத் என்னும் சமூகம் கர்நாடக மக்கள்தொகையில் 17% ஆகும். இதுவரை கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தை சார்ந்த எட்டு பேர் முதலமைச்சராக இருந்துள்ளனர்.  அந்த சமூகத்தினர் தலைமையை மாற்றும் எண்ணத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜூலை 25 அன்று இந்த சந்தேகங்களுக்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கர்நாடகாவில் எந்த விதமான நெருக்கடியும் இல்லை எனக் கூறினார். 

பின்னர் ஜூலை 25 அன்று அவர் தனது அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் தனது முதலமைச்சர் பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இல் 75 வயது வரம்பு ஆட்சியை அவர் மேற்கோள் காட்டினார். அவர் தனது கட்சித் தலைவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அன்று மதியம் தனது இராஜினாமாவை கர்நாடக ஆளுநரிடம் சமர்பித்தார். அதன் பின்னர் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சர் பதவிக்கு லிங்காயத் சமூகத்தை சார்ந்த சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் சிடி ரவி, கர்நாடக அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர். 

அடுத்ததாக 2021 ஜூலை 28 ஆம் தேதி  எடியூரப்பாவின் ஆதரவாளரும்  லிங்காயத் சமூகத்தையும் சார்ந்த Basavaraj Bommai கர்நாடகாவின் 23 ஆவது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

புதியது பழையவை