Tamil Nadu Lockdown News In Tamil

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிப்பு. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

Tamilnadu lockdown extension news
Tamilnadu lockdown news

Table Of Content :

  1. TN Lockdown Extension Highlights
  2. Tamil Nadu Lockdown News
  3. Tamil Nadu Lockdown News Update
  4. Tamilnadu Lockdown Extension 


TN Lockdown Extension Highlights :

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி.

50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. 

IT நிறுவனத்தில் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.


Tamil Nadu Lockdown News :

நேற்றைய Corona பாதிப்பு தொடர்பாக Tamilnadu சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1,62,545 பேருக்கு Corona பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1,668 பேருக்கு Corona பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனோவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,97,600 ஆக உயர்ந்துள்ளது. Corona பாதிப்பில் இருந்து குணம் அடைந்து நேற்று மட்டும் 1,887 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 25,43,320 பேர் Corona தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 199, சென்னையில் 185, ஈரோட்டில் 158 தஞ்சாவூரில் 98, சேலத்தில் 85 பேருக்கும் Corona பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tamil Nadu Lockdown News Update :

நடைமுறையில் உள்ள Lockdown வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. ஆகவே Corona தடுப்பு நடவடிக்கையாக வரும் வாரத்திற்கான Lockdown குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில்  ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணி அளவில்  நடைபெற்றது. இதில் Lockdown Extension, திரையரங்கம் திறப்பு, 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, சுற்றுலா தளங்கள் திறப்பு போன்றவற்றை பற்றி ஆலோசிக்கப்பட்டது.   இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக Lockdown Extension  குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெறும் எனக் கூறிய நிலையில் திடீரென இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு சனிக்கிழமை நடைபெறும் எனக் கூறினர். 

Tamilnadu Budget 2021 Updates In Tamil 


Tamil Nadu Lockdown Extension:

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை ஆரம்பித்த பின்னர் மூடப்பட்ட திரையரங்கம் இதுவரை திறக்கப்படவில்லை ஆதலால் திரையரங்க உரிமையாளர்கள் முதலமைச்சரிடம் தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

  • அதன்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. 
  • மேலும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறிய படி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி  செயல்பட அனுமதி. 
  • செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
  • தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி  செயல்பட அனுமதி.
  • கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.   
  • அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி. 
  •  நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில்  உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதியில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • இதுவரை இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-9-2021 லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-09-2021க்கு பிறகு  திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். 

புதியது பழையவை