SL Vs IND First T20 | Bhuvneshkumar took 4 wickets to lead the Indian team to victory

இந்தியா Vs இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் T-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா Vs இலங்கை அணிகள் விளையாடும் முதல் T-20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டி இன்று ஜீலை 25 ல் இரவு 8.00 மணிக்கு, ஆர். பிரேமாதாஸா மைதானத்தில் கொழும்புவில் நடைபெற்றது. முன்னர் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Playing XI :

இந்தியா :

Shikhar Dhawan (C), Prithvi Shaw, Ishan Kishan, Suryakumar Yadhav, Sanju Samson (WK), Hardik Pandya, Krunal Pandya, Deepak Chahar, Bhuvneshwar Kumar, Yuxvendra Chahal, Varun Chakravarthy.

இலங்கை :


Avishka Fernando, Minod Bhanuka (Wk), Dhananjaya de Silva, Charith Asalanka, Dasun Shanaka (C), Ashen Bandra, Wanindu Hasaranga, Chamika Karunaratne, Isuru Udana, Akila Dhananjaya, Dushmantha Chameera.

 Prithvi Shaw Duck :

 முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன்  Shikhar Dhawan, Prithvi Shaw களமிறங்கினர். Dushmantha Chameera வீசிய இன்னிங்சின் முதல் பந்திலேயே Prithvi Shaw தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த Shikhar Dhawan, Sanju Samson நிதானமாக விளையாண்டனர். இவர்கள் இருவர் பாட்னர்சிப்பில் 50  ரன்கள் எடுத்தனர்.  

SKY blashes Fifty : 

SL Vs ind 1st t 20 live score
SL Vs ind 1st t 20 score 


Wanindu Hasaranga வீசிய பந்தில் Sanju Samson LBW அவுட் ஆனார். பின்னர் Suryakumar Yadhav இறங்கினார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த Shikhar Dhawan ஐ 46 ரன்களில் அவுட் செய்தார் Chamika Karunaratne. அதிரடியாக விளையாடிய Suryakumar Yadhav சர்வதேச போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைசதத்தை 33 பந்துகளில் எடுத்தார்.  

Pandya Poor Form Continuous :

50 ரன்கள் அடித்த அடுத்த பந்திலேயே Wanindu Hasaranga  Suryakumar Yadhav வை அவுட் செய்தார். பின்னர் பார்முக்கு திரும்பாத Hardik Pandya களமிறங்கினர். அவர் 15 ஆவது ஓவரில் களத்திற்கு வந்தார் 5 ஓவர்கள் மட்டுமே மீதி உள்ள நிலையில் அடித்து ஆட வேண்டிய சூழ்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார் Hardik Pandya. அதற்கு  பின்  Pandya, Ishan Kishan களத்தில் இருந்தனர். ஆனால் இலங்கை அணி பந்துவீச்சாளரான Dushmantha Chameera மிகச்சிறப்பாக பந்து வீசி இந்திய அணியினரின் ரன் வேட்டையை தடுத்தார். இவர் 16 மற்றும் 18 ஒவர் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 


இறுதியில் இந்திய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிவெற்றி பெற 165 ரன்கள் தேவை.

இலங்கை அணியில் அதிகபட்சமாக Wanindu Hasaranga, Dushmantha Chameera இருவரும் முறையே இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். Chamika Karunaratne ஒரு விக்கெட் எடுத்தார். 

SL Batting :

இலங்கை அணியில் Avishka Fernando, Minod Bhanuka முதலில் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். 2.3 ஒவரில் 23 ரன்கள் எடுத்த நிலையில் Krunal Pandya Minod Bhanuka வை அவுட் ஆக்கினார். பின்னர் Avishka Fernando, Dhananjaya de Silva இருவரும் ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆகினார்கள். அதற்கடுத்து  Charith Asalanka மற்றும் கேப்டன்  Dasun Shanaka வந்தனர். Charith Asalanka அதிரடியாக ஆடினார். இந்நிலையில் Deepak Chahar 15 ஆவது ஓவர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார். இவர் 15.3 பந்தில் Charith Asalanka (43,ரன்கள்) , 15.5 பந்தில் Wanindu Hasaranga(டக் அவுட்) அவுட் செய்து அசத்தினார். கேப்டன்  Dasun Shanaka வை Varun Chakravarthy (தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில்) அவுட் செய்தார். பின்னர் வந்த Chamika Karunaratne, Isuru Udana, Dushmantha Chameera ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்திலேயே அவுட் ஆகினர். இவர்கள் மூவரையும் Bhuvneshwar Kumar வெளியேற்றினார். 

இறுதியில் இலங்கை அணி 18.3 ஓவரில் தன்னுடைய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து All Out ஆகியது. இவர்கள் 18.3 ஓவரில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக Bhuvneshwar Kumar 4 விக்கெட்டுகளையும், Deepak Chahar 2 விக்கெட்டுகளையும், மீதமுள்ள Hardik Pandya, Krunal Pandya, Yuxvendra Chahal, Varun Chakravarthy ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். 

4 விக்கெட்டை கைப்பற்றிய  Bhuvneshwar Kumar Player Of The Match ஆக தேர்வு செய்யப்பட்டார். 

இந்தியா Vs இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T-20 போட்டி ஜீலை 27ஆர். பிரேமாதாஸா மைதானத்தில் கொழும்புவில்  நடைபெறும். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்கும். 

புதியது பழையவை