செப்டம்பர் 12 ல் நீட் தேர்வு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..

   நடப்பு ஆண்டிற்கான தேர்வு குறித்து,  மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12  ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.




 மருத்துவம் (எம்பிபிஎஸ்), சித்தா ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி உட்பட மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் என்னும் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் தேசிய தேர்வு முகமை தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும். ஆனால் கடந்த ஆண்டு 2020ல் நாடு கொரோனா தொற்று பரவலால் நீட் தேர்வு பலமுறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டிற்க்கான நீட் தேர்வு 13, செப்டம்பர்,  2020 ல் நடத்தப்பட்டது. 

     இந்த ஆண்டு 2021 ல் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று  தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆனால் நீட்  தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று பரவல் இன்னும் முற்றிலும் குறையாத நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளம் மூலம் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக மத்திய அரசு தேசிய தேர்வு முகமை நிறுவனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது.

 

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் :


   

  இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான தேர்வு குறித்து, புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12  ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றும் விதமாக முந்தைய காலங்களில் தேர்வு நடந்த நகரங்களின் எண்ணிக்கையை விட, தற்போது தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது 155 நகரங்களில் இருந்து 198 ஆக நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெறும் மையங்களில் முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு முகமை இணையதளத்தில் நாளை ஜூலை 13 மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.


அரசியல் தலைவர்களின் கருத்து :


   நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளான திமுக மற்றும் பாஜக உள்ளிட்டவை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அறிவிப்பை அடுத்து  தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியதாவது, நீட் தேர்வுக்கான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எனினும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்விக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும், என கூறியுள்ளார்.

  மேலும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம். பி கூறியதாவது, கொரோனா அலை உச்சத்தில் இருக்கும் என கான்பூர் ஐஐடியின் ஆய்வில் மதிப்பிடப்பட்டிருக்கும் செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்திருக்கும் ஒன்றிய , மாநில அரசுகளைத்தான் மதிப்பதில்லை, மருத்துவ நிபுணர்களிடத்திலாவது அறிவுரை கேட்கலாமில்லையா?  என கூறியுள்ளார். 



புதியது பழையவை