SL Vs IND Second Odi : SKY and Deepak Chahar helps to lead the Indian team to victory.

Ind Vs SL second odi
Suryakumar and deepak chahar


தொடரை வென்றது இந்திய அணி. சூர்யகுமார் யாதவ், தீபக் சகர் இருவரும் 50 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். 

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜீலை 20 ல் முதல் போட்டி நடந்த அதே மைதானமான ஆர். பிரேமாதாஸா, கொழும்புவில் நடைபெற்றது. 

SL Won The Toss :

 
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வென்று  1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

50+ Partnership :

இலங்கை அணியில் அவிஷ்கா பெர்ணான்டோ மற்றும் விக்கெட் கீப்பர்  மினோட் பனூகா இருவரும்  களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 77  ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹல் வீசிய 13.2 ஆவது ஓவரில் 36 ரன்கள் எடுத்து மினோட் பனூகா அவுட்டானார். பின்னர் வந்த  பனூகா ராஜபக்ஷா ரன் ஏதும் எடுக்காமல்  சஹல் வீசிய 13.3 அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். அடுத்ததாக தனஞ்சயா டி சில்வா களமிறங்கினார். 

Avishka Fernado Hit Half Century :

சற்று நிலைத்து ஆடி 4 போர்,1 சிக்சர் உடன் அவிஷ்கா பெர்ணான்டோ தன்னுடைய அரைசதத்தை தொட்டார்.
அரைசதம் அடித்ததுமே புவனேஷ்குமார் வீசிய பந்தில் க்ருனல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் சரித் அசலன்கா களமிறங்கினார். அவிஷ்கா பெர்ணான்டோ அவுட் ஆகிய சில ஓவர்களிலேயே 32 ரன்கள் எடுத்த தனஞ்சயா டி சில்வா தீபக் சஹர் பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த  கேப்டன் சனாகா மற்றும் வனின்டு ஹசரங்கா இருவரும்  முறையே 16 மற்றும் 8  ரன்கள் மட்டும் எடுத்து வந்த வேகத்திலேயே திரும்பினார். 

Asalanka & Karunaratne Partnership :


 பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கா மற்றும் ஷமிகா கருணரத்னே ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இந்திய அணியினர் வீசிய பந்துகளை நாலாப்புறமும் பவுண்டரிக்கு அனுப்பினர். 6 போர் அடித்த அசலன்கா அரைசதம் கடந்தார். 65 ரன்கள் எடுத்த அசலன்காவை 47 ஆவது ஓவரில் அவுட் செய்தார். பின்னர் வந்த துஷ்மன்தா சமீரா, லக்ஷன் சன்டகன் இருவரும் அடுத்தடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி வரை அதிரடியாக ஆடிய ஷமிகா கருனரத்னே 5 போர் அடித்து 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்திலேயே இருந்தார். 
இறுதியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ரன்கள் எடுத்தது. 

Ind Need 276 Runs :


இந்திய அணியின் புவனேஷ்குமார் மற்றும் யுஸ்வேந்திர சஹல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுக்களை எடுத்தனர். தீபக் சஹர் இரண்டு  விக்கெட்டுக்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட்டுக்கள் ஏதும் எடுக்கவில்லை. 
இந்திய அணி வெற்றி பெற 50 ஓவர்களுக்கு 276 ரன்கள் எடுக்க வேண்டும். 

Struggling Indian Opening :


இந்திய அணி வெற்றி பெற 50 ஓவர்களுக்கு 276 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா வனின்டு ஹசரங்கா வீசிய 2 ஆவது ஓவரிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். முதல் ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்த இஷான் கிஷான் இந்த முறை ஒரு ரன்கள் மட்டும் எடுத்து ரஜிதா வீசிய பந்தில் சரணடைந்தார். இந்திய அணி 39 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த மணீஷ் பாண்டே மற்றும் கேப்டன் ஷிகர் தவான் சற்று நேரமே களத்தில் நின்றனர். கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை வனின்டு ஹசரங்கா எடுத்தார். 

SKY Hit Half Century :


 நன்றாக ஆடிக் கொண்டிருந்த மணீஷ் பாண்டே 37 ரன்களில் ரன் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா இலங்கை அணி கேப்டன் சனாகா வீசிய பந்தில் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 53 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை சாண்டகன் எடுத்தார்.

Wicket Taker Wanindu Hasaranga :

சற்று நேரம் களத்தில் இருந்த க்ருனல் பாண்டியாவும் 35 ரன்கள் எடுத்த நிலையில்  Wanindu Hasaranga வின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். இது ஹசரங்காவின் மூன்றாவது விக்கெட் ஆகும்.  

Deepak Chahar Maiden 50 :


பின்னர் இந்திய துணைக்கேப்டன் புவனேஸ்வர் குமாரும், தீபக் சகரும் இலங்கை அணியினர் வீசிய பந்துகளை நிதானமாக கையாண்டனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய தீபக் சகர் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்தார். இலங்கை அணியினரால் இந்த ஜோடியை பிரிக்கவே முடியவில்லை. கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஜிதா வீசிய முதல் பந்தை போர் அடித்து வெற்றி பெறச் செய்தார் தீபக் சகர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் புவனேஸ்வர் குமார் 19, தீபக் சாகர் 69  ரன்களுடன்  களத்திலேயே இருந்தனர்.

ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை வெற்றி பெற்றதில் 93 Vs SL இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 

இந்திய அணிக்காக எட்டாவதாக இறங்கி அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் ஜடேஜா 77 Vs NZ விற்க்கு அடுத்ததாக தீபக் சகர் 69 Vs SL உள்ளார். 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 

69 ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய தீபக் சாகர் Player Of The Match ஐ பெற்றார். 


புதியது பழையவை