நீட் தேர்வு 2021 க்கு விண்ணப்பிப்பது மற்றும் கட்டணம் செலுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே

     

NEET Exam 2021
NEET EXAM

  நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜீலை 13 முதல் ஆகஸ்ட் 6 வரை கால அவகாசம் உள்ளது.நீட் தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, எவ்வாறு கட்டணம் செலுத்துவது  என்பதைக் காண்போம்.



NEET Exam 2021 :

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 வரை கால அவகாசம் கொடுத்து உள்ளார். பிடிஎஸ், எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படிக்க நீட் (NEET UG 2021) என்னும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். 


Apply Online NEET Exam 2021 :

Apply Online NEET Exam 2021

Apply Online NEET Exam 2021 



          நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://neet.nta.nic.in  என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். தேசிய தேர்வு முகமையின் முகப்பு பக்கத்தில் நீட் தேர்வு பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதன் கீழ் "Fill Registration Form" என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தொட வேண்டும்.


New Registration NEET 2021 :

New Registration NEET 2021

New Registration NEET 2021


    இப்போது நீங்கள் ஏற்கனவே நீட் தேர்வுக்கு பதிவு செய்தவர் இருந்தால் அங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பூர்த்தி செய்த பின்னர் Sign In கொடுத்து நீங்கள் உள்நுழையலாம். நீங்கள் ஏற்கனவே நீட் தேர்வுக்கு பதிவு செய்யாதவர் எனில் New Registration என்ற லிங்க்கை க்ளிக் செய்து உள்நுழையலாம்.


Instructions NEET 2021 : 

  அங்கு விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் கீழே உள்ளவற்றை முழுவதும் படித்தும் தங்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் மேலே Download Information Bulletin என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் ஒரு அப்ளிகேஷன் பதிவிறக்கம் ஆகும். அதில் நீட் தேர்வு பற்றிய முழு விளக்கமும், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் என அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். 


 Fees Details Of NEET 2021 : 

பொதுப்பிரிவினர் = 1500 ரூபாய்

EWS/OBC                        =  1400 ரூபாய்

SC/ST/PWD மற்றும் மூன்றாம் பாலினத்தவர்  =   800 ரூபாய் தேர்விக்கட்டணம் ஆகும். 

பின்னர் முழுவதும் கீழே வந்தால், I have downloaded information Bulletin, read and understand all the Instructions therein as well as those mentioned above, and filling up the online application form accordingly என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும், அந்த வாசித்தார் அருகே உள்ள பெட்டியில் டிக் செய்து "Click here to proceed" என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.


Personal Details :

Fees Details Of NEET 2021

Personal Details


     இப்போது Personal Details என்னும் பகுதிக்கு சென்றுள்ளது. அங்கு கேட்கப்பட்டுள்ள மாணவர் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம்,Identity type, முகவரி, நாடு, மாநிலம், மாவட்டம், அஞ்சல் குறியீடு, போன் நம்பர், இமெயில், மாற்று தொடர்பு எண், பாஸ்வேர்டு என அனைத்தையும் கவனமாக படித்து சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 


NEET 2021 Registration Stage Completed:

NEET 2021 Registration Stage Completed

NEET 2021 Registration Stage Completed


      அதில் Identity type ல் தங்களது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க தேர்வு செய்து கொடுக்கவும். தங்களது தற்போதைய முகவரியும், நிரந்தர முகவரியும் ஒன்று எனில் same as present address என்ற பாக்ஸில் டிக் செய்யவும். பின் Security Pinல் உள்ள எண்ணை பதிவிட்டு Submit செய்யவும். பின்னர் அது Review page க்கு செல்லும். அங்கு நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சோதித்து விட்டு, ஒருவேளை நீங்கள் கொடுத்த தகவல்கள் தவறாக இருந்தால் கீழே உள்ள EDIT REGISTRATION FORM DATA க்கு சென்று சரியான தகவல்களை பதிவேற்றம் செய்துவிட்டு  I Agree என்ற பாக்ஸில் டிக்  செய்து Final Submit என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 

  இதனை அடுத்து உங்களது Application Number திரையில் புலப்படும் அந்த நம்பரை பதிவு செய்து . பின்னர் Complete Application Form என்ற என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 


NEET 2021 Dress Code :

NEET 2021 Dress Code
NEET preference 

   பின்னர்  திரையில் கேட்கப்பட்டுள்ள  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாவட்டம், இனம், ஏதேனும் குறை உடையவரா, நீரிழிவு நெய் உடையவரா, dress code, தேர்வு எழுத விரும்பும் மொழி, தேர்வு எழுத விரும்பும் மாநிலம், மாவட்டம், மற்றும் 2nd choice, 3rd choice, 4th choice பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாவட்டம், பள்ளியின் முகவரி, பள்ளியின் அஞ்சல் குறியீட்டு எண், பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் என அனைத்தையும் கவனமாக படித்து சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 


NEET 2021 Application Stage Completed:


NEET 2021 Application Stage Completed

NEET 2021 Application Stage Completed



   அதில் தேர்வு எழுத விரும்பும் மாநிலம், மாவட்டம் என நான்கு இடங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் கொடுத்துள்ள சென்டரில் இடம் இல்லையெனில் நீங்கள் அடுத்ததாக கொடுக்கப்பட்ட இடத்தில் தேர்வெழுத தேர்வு செய்வார்கள்.

NEET 2021 Exam Code
NEET Exam Code

     Pass status ல்  2021 ல்  12 ஆம் வகுப்பு படித்து முடித்தவர்கள் Appearing என கொடுத்து Qualifying Exam Code ல் Code 01 கொடுக்கவும். பின் Security Pinல் உள்ள எண்ணை பதிவிட்டு Submit செய்யவும். பின்னர் அது preview page க்கு செல்லும். அங்கு நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சோதித்து விட்டு , ஒருவேளை நீங்கள் கொடுத்த தகவல்கள் தவறாக இருந்தால் கீழே உள்ள EDIT APPLICATION  FORM DATA க்கு சென்று சரியான தகவல்களை பதிவேற்றம் செய்துவிட்டு  I Agree என்ற பாக்ஸில் டிக்  செய்து Final Submit என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 


NEET 2021 Document Upload : 

NEET 2021 Document Upload

NEET 2021 Document Upload


   பின்னர் Upload Document என்ற லிங்கை க்ளிக் செய்யவும். தற்போது நீங்கள் உங்களது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும், புகைப்படமானது JPG type, 10KB முதல் 200KB வரை இருக்க வேண்டும். பின் தங்களது இடது கை விரல் ரேகையை பதிவேற்றம் செய்ய வேண்டும், படமானது JPG type, 10KB முதல் 200KB வரை இருக்க வேண்டும்.பின் தங்களது கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும், கையொப்பமிட்ட படமானது JPG type, 4KB முதல் 30KB வரை இருக்க வேண்டும். பின் உங்களது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படமானது  (4" * 6") என்ற அளவுகளில் இருக்க வேண்டும். 

   பதிவேற்றம் செய்யும் அனைத்து படங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு JPG type ல் குறிப்பிடப்பட்ட KB களில் இருக்க வேண்டும் . அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின் Security Pinல் உள்ள எண்ணை பதிவிட்டு Submit செய்யவும்.


NEET 2021 Fees Pay :

NEET 2021 Fees Pay

NEET 2021 Fees Pay


     பின் Pay Examination Fee என்ற லிங்கை க்ளிக் செய்யவும், தற்போது Online Payment என்ற பாக்ஸில் டிக் செய்துவிட்டு  Proceed For Payment என்ற லிங்கை க்ளிக் செய்யவும். பின்னர் தங்களது பேங்கை தேர்வு செய்து ATM கார்டு நம்பர் உள்ளிட்ட சில தகவல்களை பூர்த்தி Proceed  என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

 கட்டணம் செலுத்திய பின் உங்களுக்கு Application Receipt மற்றும்  Payment Receipt இரண்டும் தேசிய தேர்வு முகமையால் அனுப்பப்படும். 



புதியது பழையவை