ட்ரிபில் டமாக்கா 4 மாதத்தில் 3 மிகப்பெரிய தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்கான விருந்து



    
       


பதின்மூன்றாவது  IPL சீசன் ஏப்ரல் 9 ல் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாகவும்,  IPL தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும்  IPL தொடர் பாதியிலேயே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாவது IPL சீசன் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்தி்ல் செப்டம்பர் 19  முதல்   அக்டோம்பர் 15 வரை மீதியுள்ள IPL  போட்டிகளை நடத்தலாம் என BCCI  உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Carribbean Premier League  :

Carribbean Premier League Schedule
Carribbean Premier League


இந்நிலையில்   கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் போர்டு Carribbean Premier League ஆகஸ்ட் 28   முதல்  செப்டம்பர் 19 நடைபெறும் என  அட்டவணையை வெளியிட்டது. இரு தொடர்களும் ஒரே நாளில் நடைபெறுவதால்  BCCI கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் போர்டினை Carribbean Premier League அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த வலியுறுத்தியது.  அதனால் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் போர்டு ஆளுநர் ரிக்கி ஸ்கெர்ரட் IPL சீசன் பேஸ் இரண்டிற்க்காக Carribbean Premier League  ஆகஸ்ட் 26   முதல்  செப்டம்பர் 15 வரை நடைபெறும் என அறிவித்தார். 

Indian Premier League  :
 
Indian Premier League Schedule
Indian Premier League



இதன் பின்னர் BCCI  செயலாளர் ஜெய் ஷா மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் Carribbean Premier League முடிந்து நான்கு நாட்கள் கழித்து  ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19  முதல்   அக்டோம்பர் 15 வரை நடைபெறும் என அறிவித்தார்.  
ஆனால் இதுவரை நியூசிலாந்து அணி வீரர்கள் மட்டுமே அவர்களது  கிரிக்கெட் போர்டிடம் IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாரென கூறியுள்ளனர். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ப்ங்களாதேஷ், ஆப்கானிஸதான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தங்களது முடிவினை இன்னும் அறிவிக்கவில்லை.

T20 World Cup : 

T20 World Cup Schedule
 T20 World Cup


கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் 2020 இல் நடைபெறவிருந்த ஆடவர் ஏழாவது T20 World Cup இந்தியாவிற்க்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா தொற்று குறைவடையாதலால் BCCI   மே 29ல் ஐசிசியிடம் டி 20 உலகக்கோப்பை நடத்த ஒரு மாத கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. கால அவகாசம் முடிவடையும் நிலையில் ஐசிசி IPL சீசன் முடிந்து இரண்டு  நாட்கள் கழித்து   ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக்கோப்பையை அக்டோம்பர் 17 முதல் நவம்பர் 14  வரை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்  ஐசிசியிடம் இருந்து இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும்  வெளிவரவில்லை.
 
டி 20 உலகக்கோப்பை சுற்று 1 ல் எட்டு அணிகள் பங்குபெறும், அதில் நான்கு அணிகள்  ஒரு குழுவிலும், மீதமுள்ள நான்கு அணிகள்  ஒரு குழுவிலும்  இடம்பெறும். இரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு  அணிகள் முறையே நான்கு அணிகள்  அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சுற்று 1ல் பங்குபெறும் எட்டு அணிகள் பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகும். சுற்று சூப்பர் 12 ல் பங்குபெறும் அணிகள் தரவரிசையில் உள்ள முதல்  எட்டு அணிகளும்  சுற்று 1 ல் வென்று வரும் நான்கு அணிகளும் ஆகும்.  

ICC Men's  T20 WC Groupings :


அக்டோம்பர் 17 முதல் நவம்பர் 14 வரை BCCI நடத்தும் 2021க்கான ICC Men's  T20 World Cup நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெறும். இப்போட்டிக்கான Groupings சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜீலை 16 அறிவித்தது. 
  

Round 1


Group A :

Sri Lanka, Ireland, Namibia and The Netherlands.

Group B :

Bangladesh, Scotland, Oman And Papua New Guinea. 


Super 12s 


அதில் 2020 மார்ச் 20 நிலவரப்படி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு Group பிரிக்கப்பட்டு உள்ளது.
Group 1 ல்  முன்னாள் சாம்பியன்களான West Indies, Australia, மற்றும் England, South Africa இடம் பெற்றுள்ளன. மேலும் Group A ல் இருந்து முதலிரண்டு அணிகள் Super 12 சுற்றின் Group 1 ல் இடம்பெறும்.

Group 1 :

West Indies, South Africa, Australia, England, A1 And B2. 

Group 2 ல்  முன்னாள் சாம்பியன்களான Pakistan , India  மற்றும் New Zealand, Afghanistan இடம் பெற்றுள்ளன. மேலும் Group B ல் இருந்து முதலிரண்டு அணிகள் Super 12 சுற்றின் Group 2 ல் இடம்பெறும்.

Group 2 :

New Zealand, Afghanistan, Pakistan, India, A2 And B1.
                                                              

 
புதியது பழையவை